யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. உள்ளக விளையாட்டரங்கில் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நற்குணம் 8 தங்கப் பதக்கங்களைச் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
யாழ். மருத்துவப் பீட வரலாற்றிலேயே ஒரே பட்டமளிப்பு விழாவில், ஒரு மாணவி 8 தங்கப் பதக்கங்களை வெல்வது இதுவே முதல் தடவையாகும்.
சத்திரசிகிச்சை (Surgery) – விசேட சித்தி & பதக்கம் (2), மகப்பேற்றியல் (Obstetrics and Genecology) – விசேட சித்தி & பதக்கம் (2), குழந்தை மருத்துவம் (Pediatrics) – விசேட சித்தி & பதக்கம் (2) Final MBBS – மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் முதலிடம் (1) சிறந்த மாணவிக்கான விருது – ஒட்டுமொத்த மருத்துவப் பீடத்தின் தலைசிறந்த மாணவி (1) என அபிராமி நற்குணம் வசமான பதக்கங்களின் பட்டியல் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.