யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ். நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3 நாள்களில் போதைப்பொருள்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2 சந்தேகநபர்களும், போதை மாத்திரை, ஹெரோயின், மாவா என்பனவற்றுடன் 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.