யாழில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமை பெறாமலிருப்பது கவலையளிக்கின்றது

யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிக்கின்றது என வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாகவும், ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறு தன்னை தனிப்பட்ட ரீதியாக அறிவுறுத்தியுள்ளார் .

மேலும், இவ்வாண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மீள்குடியேற்ற செயற்பாடுகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சென்ற ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தாத வீடுகள் தொடர்பாகவும் கவனமெடுக்கப்படும் எனவும், இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0
யாழில் நீண்டகாலமாக சட்டவிரோத மணல் அகழ்வு – இருவர் கைது!
21 Nov, 2025 | 05:43 PM
image
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று, தாளையடி பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த இருவர் வியாழக்கிழமை (20) மருதங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மணலுடன் டிப்பர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த டிப்பரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக இரவு பகலாக மணல் கடத்தல் இடம்பெற்று வந்த நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அத்துக்கல தலைமையில் குறித்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டபோது இந்த கைது நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.

கைப்பற்றப்பட்ட டிப்பரையும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்