அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் தலைமையகம் யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
பிரபல வர்த்தகர் அருள் ஜெயந்திரனை செயலாளர் நாயகமாகக் கொண்டு,
456/1 வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்புறமாக குறித்த அலுவலகம் ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் (ஆரம்பநிலை) றூபா உதயரட்ணத்தால் நாடா வெட்டி திறந்துவைக்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசியல் ரீதியில் தனது மக்கள் பணியை முன்னெடுத்துவரும் குறித்த கட்சியின் செயளாளர் நாயகமான அருள் ஜெயந்திரனை தலைமையாகக் கொண்டு, செயற்பட்டுவரும் நிலையில், குறித்த மக்கள் தொடர்பாடலுக்காக தலைமை அலுவலகம் திறந்துவைக்கப்பது.
இதன்போது, தமிழ் பரப்பில் இருக்கும் பல்வேறு கட்சிகளுக்குள் முற்றிலும் மாறுபட்ட நோக்குடன், தமிழ் தேசியம் சாராத ஒரு தேசியக் கட்சியாக “இலங்கையை உலகத்தில் வாழ்வதற்கு சிறந்த நாடாக்குவோம்” என்ற இலக்குடன், அனைவருக்கும் சம உரிமை, ஜனநாயகமே முன்னுரிமை என்றவாறு தனது மக்கள் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.