யாழில் இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம்!

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று (23) போராட்டமொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,

நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்.

மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு. இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும்.

மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும்.

இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர்.

எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

அத்துடன், இனம், பிரதேசம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய தெளிவான மற்றும் வலுவான பாராளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அவை முழுமையாகவும் கடைப்பிடிக்கத் தவறாத வகையிலும் அமல்படுத்தப்பட வேண்டும்.

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது. இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும் என தெரிவித்தனர்.

us

அமெரிக்கா அவசர எச்சரிக்கை

March 23, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட

jud

செப்டம்பர் 25 இல் சலே கைதுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

March 23, 2026

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது

wi

பல்பொருள் அங்காடி ஒன்றினுள் மதுபானக் கொள்ளை: ‘மோதர சுதா’ கைது!

March 23, 2026

மட்டக்குளிய பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் புகுந்து, அங்கிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களைத் திருடிய நபர் ஒருவரை முகத்துவாரம்

iran

மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை

March 23, 2026

அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான்

aya

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி

March 23, 2026

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நோக்கி தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் ஈடுபட

dea

வைக்கோல் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

March 23, 2026

வீரவில, கங்கசிறிகம பகுதியில் நபர் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வீரவில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

maso

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தார்

March 23, 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த

b

புதிய பஸ் கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

March 23, 2026

இன்றைய தினம் (23) ஒரு சில பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பல பிரதேசங்களில் பேருந்து சேவைகளில் வீழ்ச்சி காணப்படுவதாகத்

jaf

யாழில் இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம்!

March 23, 2026

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று (23) போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம்

ali

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் – இலங்கைக்கான ஈரான் தூதுவர்

March 23, 2026

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான்

wea

மின்னல் எச்சரிக்கை!

March 23, 2026

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த பகுதிகளில்

imm_Canada1

கனேடிய அரசுடைய புதிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டமூலம்; அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக கண்டனம்

March 23, 2026

கனேடிய அரசு கொண்டுவந்துள்ள புதிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டமூலம் அகதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அங்குள்ள மனித உரிமை