மேற்கு இந்தியத் தீவுகள் 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்!

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​கள் குவித்து முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. கேப்​டன் ஷுப்​மன் கில் சதம் விளாசி​னார்.

டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 318 ரன்​கள் குவித்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 173, ஷுப்​மன் கில் 20 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. 2-வது ஓவரிலேயே ஜெய்​ஸ்​வால் ரன் அவுட் ஆனார். ஜெய்​டன் சீல்ஸ் வீசிய பந்தை ஜெய்​ஸ்​வால் மிட் ஆஃப் திசை​யில் தட்​டி​விட்டு விரை​வாக ரன்​ எடுக்க ஓடி​னார். ஆனால் பந்து டேக்​நரைன் சந்​தர்​பால் கைகளுக்கு சென்ற நிலை​யில் ஷுப்​மன் கில் ரன் ஓட வேண்​டாம் என கைகாட்​டி​னார். ஆனால் அதற்​குள் ஜெய்​ஸ்​வால் ஆடு​களத்​தின் பாதி பகு​தியை கடந்​து​விட்​டார்.

இதன் பின்​னர் ஜெய்​ஸ்​வால் திரும்பி கிரீஸை நோக்கி ஓடி​னார். ஆனால் அதற்குள் டேக்​நரைன் சந்​தர்​பால் பந்தை த்ரோ செய்ய அதை பிடித்து விக்​கெட் கீப்​பர் டெவின் இம்​லாக் ஸ்டெம்பை தகர்க்க ஜெய்​ஸ்​வால் வேதனை​யுடன் பெவிலியன் திரும்​பி​னார். 258 பந்​துகளை சந்​தித்த ஜெய்​ஸ்​வால் 22 பவுண்​டரி​களு​டன் 175 ரன்​கள் எடுத்​தார். 3-வது விக்​கெட்​டுக்கு ஷுப்​மன் கில்​லுடன் இணைந்து 74 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய நித்​திஷ் குமார் ரெட்டி மட்​டையை சுழற்​றி​னார். அதிரடி​யாக விளை​யாடிய அவர், 54 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோமல் வாரிக்​கன் பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது எல்​லைக்​கோட்​டுக்கு அருகே ஜெய்​டன் சீல்​ஸிடம் கேட்ச் ஆனது. இதன் பின்​னர் களமிறங்​கிய விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான துருவ் ஜூரெலும் அதிரடி​யாக விளை​யாடி​னார்.

மறு​புறம் நிலை​யான ஆட்​டத்தை வெளிப்​படுத்​திய ஷுப்​மன் கில் 177 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 13 பவுண்​டரி​களு​டன் தனது 10-வது சதத்தை விளாசி​னார். மட்​டையை சுழற்​றிய துருவ் ஜூரெல் 79 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​கள் எடுத்த நிலை​யில் ராஸ்​டன் சேஸ் பந்​தில் போல்​டா​னார். அப்​போது இந்​திய அணி 134.2 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​கள் குவித்​திருந்​தது. அத்​துடன் முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​வ​தாக இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் அறி​வித்​தார்.

ஷுப்​மன் கில் 196 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 16 பவுண்​டரி​களு​டன் 129 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் தரப்​பில் ஜோமல் வாரிக்​கன் 3 விக்​கெட்​களை​யும், ராஸ்​டன் சேஸ் ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். இதையடுத்து பேட்​டிங் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 43 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 140 ரன்​கள் எடுத்​தது. ஜான் கேம்​பல் 10, டேக்​நரைன் சந்​தர்​பால் 34, கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 0 ரன்​களில் ஜடேஜா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடிய அலிக் அதானஸ் 84 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 41 ரன்​கள் எடுத்த நிலை​யில் குல்​தீப் யாதவ் பந்​தில் குல்​தீப் யாதவ் பந்​தில் மிட்விக்​கெட் திசை​யில் நின்ற ஜடேஜா​விடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். ஷாய் ஹோப் 31 ரன்​களும், டெவின் இம்​லாக் 14 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். இன்​று 3-வது நாள்​ ஆட்​டம் நடைபெறுகிறது.

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்