மெல்போர்ன் ‘டி-20’ போட்டிஎளிதாக வென்றது ஆஸ்திரேலியா

மெல்போர்ன் ‘டி-20’ போட்டியில் இந்திய பேட்டர்கள் கைவிட, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அபிஷேக் 68 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாவது போட்டி நேற்று மெல்போர்னில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி அதிர்ச்சி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை ஹேசல்வுட் வீசினார். பவுன்சராக வந்த 3வது பந்து சுப்மன் ‘ஹெல்மெட்’ முன் பகுதியில் பலமாக தாக்கியது. அடுத்து வந்த பார்ட்லெட் ஓவரில் அபிஷேக், ஒரு பவுண்டரி, சிக்சர் விளாச, மொத்தம் 17 ரன் கிடைத்தன.

இம்மகிழ்ச்சி சில நிமிடம் கூட நிலைக்கவில்லை. ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் சுப்மன் (5), மார்ஷிடம் ‘கேட்ச்’ கொடுத்தார். 3வது வீரராக களமிறங்கினார் சஞ்சு சாம்சன். 4 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்து, நாதன் எல்லிஸ் பந்தில் அவுட்டானார். மீண்டும் வந்த ஹேசல்வுட், வீசிய ‘அவுட் சுவிங்’ பந்தில், கேப்டன் சூர்யகுமார் (1) நடையை கட்டினார். அடுத்த 2வது பந்தில் திலக் வர்மாவும் ‘டக்’ அவுட்டானார்.

இந்திய அணி 4.5 ஓவரில் 32/4 ரன் என திணறியது. ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் எல்லிஸ், ஹேசல்வுட் பந்துகளை அபிஷேக் பவுண்டரிக்கு விரட்டினார். பின் வந்த அக்சர் படேல் (7), மூன்றாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு வீணாக ரன் அவுட்டானார்.

ஷிவம் துபேவுக்கு முன்னதாக வந்தார் ஹர்ஷித் ராணா. குனேமன், ஸ்டாய்னிஸ் பந்துகளில் பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். மறுபக்கம் அபிஷேக், 23 பந்தில் அரைசதம் அடித்தார். சர்வதேச ‘டி-20’ல் இது இவரது 6வது அரைசதம். ஸ்டாய்னிஸ் பந்தில் ஹர்ஷித் சிக்சர் அடிக்க, இந்திய அணி 15 ஓவரில் 105/5 ரன்களை எட்டியது.

16 வது ஓவரை வீசிய பார்ட்லெட், 2வது பந்தில் ஹர்ஷித்தை (35) வெளியேற்றினார். வந்த வேகத்தில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷிவம் துபே (4), அடுத்த பந்தில் அவுட்டானார். மீண்டும் வந்த பார்ட்லெட் ஓவரில் அபிஷேக், 4, 6 என அடுத்தடுத்து விளாச, 15 ரன் கிடைத்தன. இவர் 37 பந்தில் 68 ரன் எடுத்த போது, எல்லிஸ் பந்தில் அவுட்டானார். கடைசியில் பும்ரா (0) ரன் அவுட்டானார். இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹேசல்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது, ஹெட் (28), வருண் சுழலில் சிக்கினார். 26 பந்தில் 46 ரன் எடுத்த மார்ஷ், குல்தீப் பந்தில் வீழ்ந்தார். டிம் டேவிட் (1), இங்லிஸ் (20), ஓவன் (14), ஷார்ட் (0) என அடுத்தடுத்து அவுட்டான போதும், ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் 126/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா 0-1 என தொடரில் பின்தங்கியது. இந்தியா சார்பில் பும்ரா, குல்தீப், வருண் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்