வுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் நடத்தப்பட்ட ‘கெக்கும Sri Lanka – Mingle with Dilith’ என்ற சிறப்பு சந்திப்பு, மெல்போர்னில் உள்ள அகேசியா கெம்பஸ் தியேட்டரில் நடைபெற்றது.
‘சர்வஜன அதிகாரம்’ மற்றும் Melbourne Solidarity ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில், மெல்போர்னில் வசிக்கும் பெருமளவிலான இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தாய்நாட்டின் மீதுள்ள அக்கறை, அன்பு மற்றும் எதிர்கால இலங்கையின் வளர்ச்சிக்காக பங்களிக்க அவர்கள் கொண்டுள்ள தயார்நிலை ஆகியன இச்சந்திப்பில் வெளிப்பட்டதுடன், அவர்களின் ஆதரவு எதிர்காலத்திலும் தாய்நாட்டிற்கு பெரும் பலமாக அமையும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.