மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.
மெக்சிகோவின் சோனோராவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் வழக்கம் போல் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.