யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைக் கிருமித் தொற்று ஏற்பட்டு பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த சிசு கந்தர்மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுடையதாகும்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் சிசு பிறந்த நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க் கிழமை சிசு உயிரிழந்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.