முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன – ஐங்கரநேசன்!

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலை, இலக்கியங்கள் அளப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கின்றன. போர்க்களத்தில் ஆயுதங்கள் பேசியபோது மக்கள் களத்தில் நின்று கலை, இலக்கியங்கள் பேசின. போராட்டங்களின் நியாயங்களையும், வலிகளையும் சொல்லி மக்களை எழுச்சிகொள்ள வைத்து அவர்களைத் தேசமாக ஒருங்கிணைத்ததில் கலை, இலக்கியங்கள் பெரும் பங்களிப்புகளைச் செய்தன. ஆனால், முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு, எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன. கலை, இலக்கியங்கள் பேசவேண்டிய விடயங்கள் இன்னும் ஏராளம் இருக்க, அவை ஊமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், ‘வேர்முகங்கள்’ நூலின் ஆசிரியருமான பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பொ. ஐங்கரநேசன் கலை, இலக்கிய ஆளுமைகளுடன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பான ‘வேர்முகங்கள்’ நூலின் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளை பரி-மத்தியா ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏற்புரை ஆற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. போராட்டம் முளை கொண்டதற்கான காரணங்கள் இப்போதும் அப்படியே நீடிக்கும்போது, போராட்டம் முடிவுக்கு வர இயலாது. அது சாத்தியமான வழிகளில் எல்லாம் ஜனநாயகப் போராட்டமாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, இப்போராட்டங்கள் இன்று அரசியல் வாதிகளுக்குரிய ஒரு பணி என்பதாக மாத்திரமே சுருங்கிப் போயுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் முடிவுடன் தமது பேனாக்களை மூடி வைத்துள்ள கலை, இலக்கியவாதிகள் ஜனநாயகப் போராட்டக்காலத்திலும் தமது பணிகளைத் தொய்வின்றித் தொடரவேண்டும்.

போராட்டக்காலத்தில் பேசாமடந்தைகளாக இருந்த பலர் இப்போது தமிழ்த் தேசிய வாதத்தைக் கேள்விக்குள்ளாக்கத் தலைப்பட்டுள்ளனர். இலங்கையில் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் அவர்கள் உயிர்பெற்றுள்ளனர்.

போருக்குப் பின்னரான எமது இளைய தலைமுறையைத் தமிழ்த் தேசிய உணர்வில் இருந்தும் மடைமாற்றி, பெருந்தேசிய வாதத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரலை தெரிந்தோ தெரியாமலோ முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், எமது போராட்டத்தின் நியாயங்களை, போரில் பெற்ற வெற்றிகளை, பட்ட வதைகளை எமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுவது வரலாற்றுக் கடமையாகும். அதை எமது கலைஞர்களும் இலக்கியவாதிகளும் செய்ய முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7