முள்ளிக்குளம் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்.பி.

மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மலைக்காடு கிராமத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார்.

குறிப்பாக முள்ளிக்குளம் கிராமமக்கள் கடந்த 2007ஆம் ஆண்டு அசாதாரண சூழ்நிலைகாரணமாக தமது சொந்த இடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இவ்வாறு தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளத்திலிருந்து வெளியேறிய மக்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் தற்போது மலைக்காடு என்னும் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்மக்களின் பூர்வீகக் கிராமமான முள்ளிக்குளத்தினை கடற்படையினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இவ்வாறாக கடற்படையினர் மற்றும் வனவளத் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள தமது முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்புச்செய்து, தமது பூர்வீக கிராமத்தில் தம்மை விரைந்து மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இதன்போது முள்ளிக்குளம் மக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்தோடு முள்ளிக்குளம் கிராம மக்களால் தற்போது விவசாயத்திற்கு நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டுவரும் புளியங்குளத்தின் நீரேந்துப் பகுதிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்குமாறும் முள்ளிக்குளம் கிராமமக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் முள்ளிக்குளம் கிராமமக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்கனவே தாம் பாராளுமன்றில் பேசியுள்ள விடயத்தினை இதன்போது சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், கடற்படையினால் ஆக்மிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிவிடுவிப்புத் தொடர்பாக பாராளுமன்றில் தம்மால் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வி எழுப்பப்டுமெனவும் தெரிவித்தார். அத்தோடு முள்ளிக்குளம் கிராமத்தின் மீள்குடியேற்றம் தொடர்பாக தம்மால் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை புளியங்குளத்தின் நீரேந்துப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும் தம்மால் உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினரால் மேலும் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்