முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.