நிலக்கரி ஊழல் தகவல்கள் குறித்து அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோரிடம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை கையளித்து விளக்கமளித்துள்ளார்.
மேலும் முன்னாள் சபாநாயகரும் சிரேஷ்ட அரசியல் வாதியுமான கரு ஜயசூரியவை சந்தித்தும் விளக்கமளித்துள்ளார்.
அந்த வரிசையில் நேற்று (26.02.2026) முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வீட்டுக்கு சென்று நிலக்கரி ஊழல் குறித்து அவருக்கு விளக்கமளித்துள்ளார்.
பெப்ரவரி 17, ஆம் திகதி நிலக்கரி ஊழல் குறித்த தகவல்களுடன் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.