முதல் அணியாக மகளிர் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா

குவாஹாட்டி, பர்சாபரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (29) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்தை நொக்-அவுட் செய்த தென் ஆபிரிக்கா, முதாலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்கா 125 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

அணித் தலைவி லோரா வுல்வார்ட் குவித்த அபார சதம், மாரிஸ்ஆன் கெப் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

மேலும் 2017இலும் 2022இலும் அரை இறுதிகளில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விகளுக்கு இம் முறை தென் ஆபிரிக்கா சரியான பதிலடி கொடுத்து அந்தத் தோல்விகளை நிவர்த்திசெய்துகொண்டது.

இப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணி என கருதப்பட்ட இங்கிலாந்துக்கு நெட் சிவர் – ப்றன்ட் முதலில் களத்தடுப்பில் ஈடுபட எடுத்த முடிவு தவறு என்பதை புரிந்துகொள்ள வெகுநேரம் செல்லவில்லை.

தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்டும் தஸ்மின் ப்றிட்ஸும் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எவ்வாறாயினும் இரண்டு சந்தர்ப்பங்களில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த தென் ஆபிரிக்காவை வீழ்ச்சியிலிருந்து மீட்ட பெருமைலோரா வுல்வார்டையே சாருகிறது.

தஸ்மின் ப்றிட்ஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவரது விக்கெட் உட்பட 3 விக்கெட்கள் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. (119 – 3 விக்.) இதனைத் தொடர்ந்து லோரா வுட்வார்டும் மாரிஸ்ஆன் கெப்பும் இணைந்து 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பெடுத்தாடிய லோரா வுல்வார்ட் 7ஆவது விக்கெட்டில் க்ளோ ட்ரையொனுடன் மேலும் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டு 48ஆவது ஓவரில் களம் விட்டகன்றார்.

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை