மஸ்கேலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (7) மஸ்கெலியா, அப்கோர்ட் பகுதியிலிருந்து சென்ற இந்த முச்சக்கரவண்டி, தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்ததாகவும் அதில், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.