மேற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவைளப்பு நடவடிக்கையின் போதே குறித்த மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மீன்பிடி படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.