மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் இன்று மாலை(8.3.2026) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 49 , 23 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து 40 மற்றும் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
கைதான இருவரும் மீன் வியாபாரி மற்றும் உதவியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.