மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை!

சர்வதேச கடற்பரப்பில் இனம் தெரியாத குழுவினரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களின் நலன் விசாரிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று புதன்கிழமை (04) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு “சதுன் புதா 04” (IMUL-A 0852 CHW) எனும் பலநாள் மீன்பிடி படகில் இருந்த நான்கு மீனவர்களே இலக்காகியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தலையீட்டில் நேற்று காலை கரைக்கு அழைத்து வரப்பட்ட இந்த மீனவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பின்வருமாறு கூறினார்:

“இந்த மீனவர்கள் தாக்கப்பட்ட விதம் மிகவும் மிலேச்சத்தனமானது. இவர்களது கூற்றுப்படி, இது இந்தியக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. எவ்வாறாயினும், இதனுடன் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என இந்திய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே, இந்தியாவின் பெயர், கொடி அல்லது மொழியைப் பயன்படுத்தி வேறு ஏதேனும் குழு இக்குற்றத்தை இழைத்திருப்பின், அது இந்தியாவிற்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், எமது மீனவ சமூகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.”

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறியப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு இராஜதந்திர மட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினர் இது தொடர்பான விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

“நாங்கள் கடற்றொழில் அமைச்சாக மீனவ சமூகத்தின் பாதுகாப்பிற்காக முன்னிற்கின்றோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்,” என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னர், “தினிதி துவ 01” மற்றும் “தினிதி துவ 03” ஆகிய படகுகளில் தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு மீனவர் குழு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் கடந்த 31 ஆம் திகதி அவ்வைத்தியசாலைக்குச் சென்று அவர்களின் நலன் விசாரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.