மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம்

மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது. கண்காட்சியின் 2ஆம் நாள் நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் லால்காந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வின் போது, சீரற்ற காலநிலை உட்பட இயற்கை அனர்த்தங்களால் மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இவற்றை தடுப்பதற்குரிய விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. மேற்படி குழுவின் அறிக்கையும் அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

மீன்பிடி கைத்தொழிலின்போது எவ்வித குற்றமும் இழைக்காத, சட்டத்திட்டங்களின்போது செயல்பட்ட மாத்தறை, தங்கலை, காலி ஆகிய பகுதி மீனவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், தர்மபிரிய திசாநாயக்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எமது அமைச்சின் 25 வருடகாலம் சேவையாற்றியவர்களுக்குரிய கௌரவிப்பும் இடம்பெற்றது. கடல்சார் சட்டங்களை முறையாக பின்பற்றி செயல்படும் கடற்றொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அனைத்து தரப்பினரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

மீன்பிடி தொழில்துறையென்பது கடல் மற்றும் ஆறுகளுக்கு சென்று மீன்பிடிப்பது மட்டும் அல்ல. அதனை சார்ந்து பல விடயங்கள் உள்ளன. எனவே, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் 10.6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது மேலும் இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீன்பிடி துறைமுகங்களை கட்டியெழுப்புவதற்கும் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய மீன்பிடி கைத்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது இலக்காகும். அதற்கமைய மீன்பிடித்தொழில்துறையும் நவீனமயப்படுத்தப்படும்.

மீனவ குடும்பங்களை நாம் நேரில் சந்தித்து கலந்துரையாடி, பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றோம். மீன்பிடி தொழில்துறை மூலம் எமது நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்க வேண்டும். அந்திய செலாவணியை பெறுவதற்கு வழிசமைக்க வேண்டும். அதற்குரிய பங்களிப்பை நாம் வழங்க வேண்டும். ” என்றார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்