ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி பெற்ற திரைப்படங்கள் மீண்டும் புதிய தொழில்நுட்பத்தில் மறு வெளியீடு செய்வது புதிய டிரெண்டாகி இருக்கிறது. அந்த வகையில் விஜய் – சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் பட மாளிகையில் வெளியாகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திரையுலகத்திலிருந்து அரசியலுக்கு தாவிய விஜய் – திரையுலகத்தில் தொடர்ந்து இருந்தாலும் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் சூர்யா- இந்த இருவரும் இணைந்து நடித்து 2001 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘பிரண்ட்ஸ்’. இந்தத் திரைப்படம் தற்போது நவீன தொழில்நுட்பத்தில் மறு பதிப்பு உருவாக்கப்பட்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது. இதனை ஜாக்குவார் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வினோத் ஜெயின் வெளியிடுகிறார்.
விஜய் நடித்த ‘கில்லி’, ‘சச்சின்’, ‘குஷி’ போன்ற படங்கள் ரீ ரீலிசிலும் வசூலில் சாதித்தது போல் இந்த படமும் ( விஜய் -சூர்யா- வடிவேலு- கூட்டணியின் காரணமாக) வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.