போலந்து விமான நிறுவனமான என்டர் ஏர், இன்று இலங்கைக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன்படி, கட்டோவிஸ் மற்றும் வோர்சாவிலிருந்து இரண்டு விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) அறிக்கையின் படி, போலந்தின் கட்டோவிஸ் மற்றும் வோர்சாவிலிருந்து இரண்டு எண்டர் ஏர் விமானங்கள் குளிர்கால பருவத்துக்காக இன்று காலை வரவேற்கப்பட்டன.
விமானங்களில் வந்த பயணிகள் இலங்கை தேயிலை சபையால் பிரீமியம் சிலோன் தேநீர் பொதிகளுடன் வரவேற்கப்பட்டனர்.