நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நிலையான தொலைபேசி மீண்டும் மக்கள் கைகளில் தவழ உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட் கோட்சே என்பவர், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், லேண்ட் லைன் போனை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த போன், சமூக ஊடகங்கள் மற்றும் கவன சிதறல்களை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘பிசிக்கல் போன்ஸ்’ என அழைக்கப்படும் இந்த சாதனத்தில், ‘வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்டைம்’ போன்ற செயலிகளின் இணைய அடிப்படையிலான அழைப்புகளை பெற முடியும்.
இது குறித்து, கேட் கோட்சே கூறியதாவது:
இது ஒரு ரெட்ரோ பாணி லேண்ட் லைன் போன். இதில், ‘புளூடூத்’ வசதியும் உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் போனுடன் எளிதாக இணைக்க முடியும்.
லேண்ட் லைன் போனை ஆன் செய்ததும், ஸ்மார்ட் போனின் புளூடூத் அமைப்பில், அதை தேர்ந்தெடுத்து இணைக்க வேண்டும். இதன்பின் ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகளை பிசிக்கல் போன் வழியாக பயன்படுத்தலாம். மொபைல் போன் பயன்பாட் டை குறைக்க இது உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஜூலையில் ஆன்லைன் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாதனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கேட் கோட்சே தெரிவித்துள்ளார்.