மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினருக்கு எதிரான அவதூறுகள்; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட சைபர் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேரர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (13) பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தேரர்கள், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைந்து பௌத்த மதகுருமார்களைக் குறிவைத்து இவ்வாறான அவதூறுப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகக் குற்றம் சாட்டினர்.

குறிப்பாக, அண்மையில் அரசியல்வாதி ஒருவரால் மிஹிந்தலை தேரரைப் பற்றிக் கூறப்பட்ட ‘வனச்சாரி’ போன்ற தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்கள், தனிப்பட்ட ஒரு மதகுருவை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த மகா சங்கத்தினரையும் அவமதிக்கும் செயலாகவே கருதப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டின் கலாசாரம் மற்றும் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதில் முன்னின்று உழைக்கும் தேரர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் தொடுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகப் பல்வேறு யூடியூப் அலைவரிசைகளைப் பயன்படுத்தி மதகுருமார்களைப் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகக் கவலை வெளியிட்ட அவர்கள், இக்கட்டான சூழல்களில் தேரர்கள் மௌனம் காக்கப் போவதில்லை எனத் தெரிவித்தனர். நாட்டின் ஆட்சியாளர் என்பவர் மக்கள் மற்றும் மதத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டுமே தவிர, இவ்வாறான அவமதிப்புகளைக் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தப் பிரச்சனை குறித்து நாட்டின் மகாநாயக்க தேரர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த முறைப்பாட்டின் மீது பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுத்து உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர்கள் அக்கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது