கூலியை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் நடிக்கும் படத்துடைய அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் , தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி வருகிறார். இவரது படங்களுக்கு என்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், பலரும் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ படத்தினை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் இயக்குனராக தொடர் வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாக இந்தப் படத்துக்காக அவர் தயாராகி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக மிரட்டலான ப்ரொமோ வீடியோ ஒன்றினையும் வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர். இந்த ப்ரொமோ ரசிகர்கள் இடையில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகிறது.