மிகிந்தலை விகாரையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று (14.12.2025) தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் அநுராதபுரம் அதிகாரிகள் நடத்திய ஆராச்சியில் மிகிந்தலை விகாரை மற்றும் அதை அண்டிய மலைப்பாங்கான பகுதிகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன் படி உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விகாராதிபதி தெரிவித்த கருத்து,
நான் இதை கண்டு கனகாலமாகும். ஆனால் நான் சொன்னாலும் யாரும் கணக்கில் எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்தேன், அவர் கொழும்பிலுள்ள தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் பிரதானிக்கு அறிவித்துள்ளார்.
அவர்கள் இன்று வந்து ஆராச்சி செய்துள்ளனர். 2000 வருடங்கள் பழைமையான மண்டபம் மற்றும் சஹித்த, ஆராதனா கல் ஆகியவற்றில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் மழை வீழ்ச்சி அதிகரித்துள்ளதால் அனர்த்தம் ஒன்று ஏற்படலாம்.அரசு இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடன் ஏதும் கோபம் இருந்தால் அதை தனிப்பட்ட முறையில் தீர்த்து கொள்ளவும்.இது மக்களின் சொத்து, பாதுகாப்பது உங்களின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.