நாட்டின் மாபெரும் புகைப்பட உபகரண வர்த்தக கண்காட்சியான Sony Alpha Festival 2025 இல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வெள்ளிக்கிழமை (31) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
வெள்ளிக்கிழமை (31) தொடங்கிய இந்த கண்காட்சி சனிக்கிழமை (01) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (02) திகதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
camera.lk இனால் ஏற்பாடு செய்துள்ள இந்த வர்த்தக கண்காட்சியை பார்வையிடுவதற்கு நுழைவு கட்டணம் அறவிடப்படாதது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் நவீன கேமரா உபகரணங்கள், கேமரா உபகரணங்களுக்கான சிறப்பு தள்ளுபடிகள், புகைப்பட பட்டறைகள் மற்றும் பல நவீன விடயங்கள் காட்சி படுத்தபட்டுள்ளன.
இந் நிகழ்வில் கலந்துக்கொண்ட நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில்,
கண்காட்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் தனது நன்றி. புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி எடுப்பதில் ஆர்வமுள்ள அனைவரின் அறிவை வளர்த்துக்கொள்ள இதுபோன்ற கண்காட்சிகள் மிகவும் உதவியாக இருக்கும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற கண்காட்சிகளை நடத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க ஒரு விசேட திட்டத்தின் அவசியம் . மேலும், வெகுசன ஊடக அமைச்சர் என்ற முறையில், இந்த விஷயத்தில் தான் விசேட கவனம் செலுத்துவேன் என்றார்.