‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதனிடையில் ‘மாஸ்க்’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்தாண்டு அவரது இரண்டாவது படமாக வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களாகவே ‘மாஸ்க்’ ப்ரமோஷன் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் இடையிலும் இந்தப் படத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ‘மாஸ்க்’ பட தலைப்புக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கவின் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தினை நடிகை ஆண்ட்ரியா தயாரித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை வழங்குகிறார். சில தினங்களாகவே இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்ட்ரியா, கவின் உள்ளிடோர் நேர்காணல்களில் பேசி வருவது இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதோடு படத்துக்கு திரையுலகில் நல்ல டாக்குகளும் உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் புதுகை மாரிஸா என்பவர் ‘மாஸ்க்’ படத்துடைய டைட்டில் தன்னுடையது என தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசும்போது, சென்ட்ராயன், பிளாக் பாண்டி, வடிவுக்கரசி மற்றும் ஷகீலா ஆகியோர் நடிப்பில் ஹாரர் காமெடி படமாக ‘மாஸ்க்’ படத்தினை உருவாக்கி இருக்கிறேன். இந்த தலைப்பை கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்தேன்.

இதனிடையில் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ என்ற உருவாவதாக தகவல் வந்ததும் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கத்திடம் முறையீடு செய்தேன். அதற்கு யாருக்கும் என்ஓசி தரவில்லை. படத் தலைப்பு உங்களுடையது தான் என உறுதி அளித்தார். ஆனால் வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டு மாஸ்க் போஸ்டர் வந்ததும், மீண்டும் அவரிடம் கேட்டேன். பதில் எதுவும் இல்லை. தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி ஆகிய மூன்றில் முறையீடு செய்தும் எந்த விதமான பதிலும் இல்லை.

கவினுடைய ‘மாஸ்க்’ படக்குழுவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே வெற்றிமாறன், ஆண்ட்ரியா, சொக்கலிங்கம் உள்ளிட்டட மாஸ்க் பட தயாரிப்பாளர்கள் யாருக்கும் தெரியாது. அவர்களை குற்றம் சொல்ல இயலாது. என் படம் சென்சார் முடிந்து முழுமையாக ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், எனக்கு நியாயம் வேண்டும். இவ்வாறு புதுகை மாரிஸா தெரிவித்துள்ளார்.

கவின் நடிப்பில் சமீபத்தில் ‘கிஸ்’ திரையரங்குகளில் வெளியானது. டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குனராக அறிமுகமான இப்படம் ரசிகர்கள் இடையில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தற்போது அவர் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விகர்​ணன் அசோக் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி. சொக்கலிக்கம் என்பவர் இணைந்து மாஸ்க்கை தயாரித்துள்ளனர். அத்துடன் இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை வழங்குகிறார். டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாகியுள்ள மாஸ்க் டிரெய்லர் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்றது. ப்ளடி பெக்கர், கிஸ் படங்கள் பெரியளவில் ரசிகர்களை கவராத நிலையில் ‘மாஸ்க்’ கவினுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்