மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தயார்படுத்தி சரியாகச் செயற்படும் தலைவர்களே எதிர்காலத்திற்குத் தேவை – பிரதமர்

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) 19ஆவது பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 16ஆம் திகதி நெலும் பொகுண அரங்கில் நடைபெற்றது.

முப்படைகளுக்கான உயரிய இராணுவக் கல்வி நிறுவனமான இக்கல்லூரியில், 19ஆவது பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 26 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட 149 பயிற்சிப் பணியாளர்களுக்கு இதன்போது பட்டங்கள் வழங்கப்பட்டன. இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் வலிமையைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.

கல்விச் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குGolden Owl Award, Golden Pen Award மற்றும் Commandant’s Honours ஆகிய மூன்று சிறப்பு விருதுகளைப் பிரதமர் வழங்கியதுடன், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சஞ்சிகையின் (Defence and Security Journal) 10ஆவது பதிப்பு மற்றும் ‘Owlet’ சஞ்சிகை என்பனவும் உத்தியோகபூர்வமாகப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.

இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர்:

‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், குறிப்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டியதுடன், உயிரிழந்த அனைவருக்கும் தனது மரியாதையைச் செலுத்தினார். மேலும், தேசிய நெருக்கடியின் போது முப்படையினர் மக்களுடனும் சிவில் நிறுவனங்களுடனும் இணைந்து, பாரிய அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டமைக்காகப் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தக் கற்கையில் வெளிநாட்டுப் பயிற்சிப் பணியாளர்களின் பங்குபற்றல், சர்வதேச அனுபவப் பரிமாற்றம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவு ஆகியவற்றை வலுப்படுத்துவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்காலத் தலைவர்கள் சட்டத்தை மதித்து, ஒழுக்க விழுமியங்களைப் பேணி, மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொண்டு, கற்றல் அனுபவங்களுக்கமையச் செயற்படுவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்துடன் இராணுவச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்த போதிலும், சரியான தீர்மானத்தை எடுத்தல், ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தலைமைத்துவத்தின் அடிப்படை அம்சங்களாக என்றும் நிலைத்திருக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இக்கல்லூரியில் கட்டியெழுப்பப்பட்ட தொழில்சார் தொடர்புகள், எதிர்காலச் சமாதான நடவடிக்கைகள், மனிதாபிமானப் பணிகள், சர்வதேச பயிற்சிகள் மற்றும் பிராந்திய நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் செயற்பாடுகளுக்கு முக்கியமானதாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள், DSCSC இன் முன்னாள் கட்டளைத் தளபதிகள், தற்போதைய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், ஏனைய கௌரவ விருந்தினர்கள் மற்றும் பட்டதாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.