பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்துவதாகவும் பிறந்திருக்கின்ற இந்த மார்ச் மாதத்தை மோசடி தடுப்பு மாதமாகவும் நயாகரா பிராந்திய காவல் துறை பிரகடனப்படுத்தியுள்ளது.
பொதுவான நுகர்வோர் மோசடி முறைகளிலிருந்து உங்களையும் உங்கள் வணிகத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
மோசடிக்காரர்களை எப்படி புகாரளிக்க வேண்டும் என்பதை அறிந்து சட்ட அமலாக்க அமைப்புகளை அணுகி மோசடிகளைத் தடுக்க உதவுங்கள் எனவும் கனடியர்கள் மோசடிகளை அறிந்து மறுத்து புகாரளிக்க உதவும் இந்த வருடாந்திர விழிப்புணர்வு இயக்கம் குறித்தும் மிக முக்கியமாக அறிந்திருக்க வேண்டும் எனவும் நயாகரா பிராந்திய காவல் துறை தனது லிங்டின் தளத்தில் மேலும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.