மானிப்பாய் பாதீடு அமர்வு சபையில் அமளி

மானிப்பாய் பிரதேச சபையின் பாதீடு அமர்வானது தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.

பாதீடு மீதான கருத்துக்களின்போது தேசிய மக்கள் சக்தியினன் தவிசாளர் பக்கச்சார்வாக செயற்படுவதாகவும், வேறு பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.

அதன்பின்னர் 14 மேலதிக வாக்குகளால் பாதீடானது நிறைவேற்றப்பட்டது. பின்னர் சபையின் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

அனர்த்தம் காரணமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண பணிகளுக்கான பதிவுகளின்போது உத்தியோகத்தர்கள் சீராக செயற்படவில்லை என உறுப்பினர்களான உஷாந்தன் மற்றும் ரமணன் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

இதன்போது குறுக்கிட்ட தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவர், அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு தவறுகள், ஊழல்கள் செய்வது தமக்கு தெரிகிறது என்றும், மக்களுக்கு சேரவேண்டிய நிதி சேரவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் ரமணன், அநுரவை ஒரு சிங்கம் என்றும், தாங்கள் சிங்கத்தின் பிள்ளைகள் என்றும் இவர்கள் தங்களை தாங்கள் நினைக்கின்றனர்.

உங்களுடைய என்.பி.பி கட்சியினர்தான் கிராம சேவகரிடம் தனியார் பட்டியல் கொடுத்தனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என்றார். இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் உஷாந்தன், கட்டுடையில் ஒரு இடைத்தங்கல் முகாம் இருந்தது.

முதல்நாள் நான் அங்கே சென்று அங்குள்ள மக்களுக்கு நுளம்புவலை மற்றும் ஏனைய பொருட்கள் கொடுத்துவிட்டு வருகிறேன், அடுத்தநாள் உங்களது அமைப்பாளர் (தேசிய மக்கள் சக்தி) போய் கேட்கின்றாராம் எல்லாம் கிடைத்ததா என்று. ஏன் இப்படி ஏமாற்றுகின்றீர்கள்? மக்களுக்கான காசை கொடுப்பதற்கு வக்கில்லை, சரியான பதிவுகளை எடுப்பதற்கு வக்கில்லை, வீட்டில் வைத்து பதிவுகளை செய்துவிட்டு கொண்டுவந்து கொடுக்கின்றீர்கள் என குற்றம்சாட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் சிலரும் எழுந்து சத்தமாகவும், ஆவேசமாகவும் கருத்துக்களை முன்வைத்தவேளை சபையில் குழப்பம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது.

கடுமையான முயற்சியின் பின்னர் தவிசாளர் சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இருப்பினும் தான் ஒரு பெண் உறுப்பினராக இருந்தும், தான் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தவிசாளர் மீது குற்றச்சாட்டு முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து