நேபாளத்தில் நடந்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, அடுத்தாண்டு மார்ச்சில், அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், புதிதாக 120 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த செப்டம்பர் 4ம் தேதி பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு, சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது. இந்த தடை இளைய தலைமுறையினரிடையே பெரும் கோபத்தை ஏற் படுத்தியது. மேலும், நாட்டில் தொடர்ந்து வரும் நிர்வாக சீர்கேடு, ஊழலுக்கு எதிராகவும் போராடும் நிலைக்கு ஆளாகினர்.
இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 8ம் தேதி காத்மாண்டு மற்றும் பனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடு பட்டனர்.
மறுநாள், அந்நாட்டின் பார்லிமென்ட் கட்டடம் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு தீ வைத்து கொளுத்தும் அளவுக்கு போராட்டம் தீவிரமடைந்தது.
போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து, அப்போ தைய பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இரண்டு நாட்களில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பவுடேல், அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தலைமையிலான இடைக்கால அரசை நியமித்தார்.