முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலன் தொடர்பில் கேட்டறிந்து கொள்வறத்கு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு செவ்வாய்க்கிழமை (07) சென்றார்.
முன்னாள் ஜனாதிபதியை நேசிக்கும் பல அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் முன்னாள் ஜனாதிபதியின் நலனைக் காண தினமும் கார்ல்டன் இல்லத்திற்குச் சென்று வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டு தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு வந்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த மஹிந்த அமரவீர, மஹிந்த ராஜபக்ஷ ஒரு சகாப்தத்தை உருவாக்கிய தலைவர் என்று கூறினார்.