பத்தாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் 42 வயதுடைய பெண் ஒருவர் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரான பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நேற்றிரவு 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.