மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணங்கள், உலர் உணவு விநியோகம், மருத்துவ வசதிகள் மற்றும் இடம் பெயர்ந்தோருக்கான தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அனர்த்தத்தின் காரணமாக ஏற்பட்ட விவசாய மற்றும் கால்நடை சேதங்களை மதிப்பீடு செய்து, அவற்றிற்கான இழப்பீடுகளை துரிதமாக வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனத் தெரிவித்தார்.

நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வெள்ள அனர்த்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள கல்வி வலய மாணவர்களின் நிலை, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துரித நிவாரண மற்றும் இழப்பீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அரச அதிபர் ஊடாக உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மன்னார் மாவட்டத்தில் அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் வாழ முடியாத வீடுகளில் வசிக்கும் 70 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு புதிய காணியை பெற்றுக்கொள்ள அல்லது வீடு கட்டுவதற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில