சென்னை:
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் நிலையில், தற்போதைய தவெக அரசு மத்திய அரசுக்கு எதிராகப் பேசுவதில்லை எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கட்சியில் இணையும் நிகழ்வுக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் முன்வைத்த முக்கியக் கருத்துகள்:
-
மாற்றாந்தாய் மனப்பான்மை: நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை மத்திய மோடி அரசு எவ்வாறு வஞ்சித்து வருகிறது என்பதைத் தொடர்ந்து பேசி வருகிறோம். பாஜக அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் அணுகுகிறது; அநீதி இழைப்பது என்பது பாஜகவின் மரபணுவிலேயே உள்ளது.
-
அனைவரும் அமைதி ஏன்?: தமிழ்நாட்டிற்கு நிறையச் செய்ததுபோல பாஜக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறது. ஆனால், பாஜக பற்றிப் பேசாமல் திடீரென அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் (உதயநிதி ஸ்டாலின்) அமைதியாக இருக்கிறார். முதலில் பேசிக் கொண்டிருந்தவர்களே தற்போது பேசுவதில்லை.
-
ஆளுங்கட்சி மீது விமர்சனம்: தமிழ்நாட்டில் ஆளும் கட்சி பாஜக குறித்துப் பேச வேண்டும். ஆனால், ஆளும் தவெக அரசு மத்திய அரசுக்கு எதிராகப் பேசுவதில்லை என மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.
-
கூட்டணி நிலைப்பாடு: நேற்று நடைபெற்ற தவெக கூட்டணிக் கூட்டம் வெறும் பெயர் வைப்பதற்கான கூட்டம் மட்டுமே; அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிப்போம். வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
Hashtags:
#ManickamTagore #Congress #TVKGovt #ChiefMinisterVijay #BJP #UnionGovernment #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil