மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீக்கம்

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதாகவும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் சுமிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்ட போதிலும், சில மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் முதலாம் நிலை எச்சரிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் பின்வருமாறு,

அதன்படி,​ கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கங்க இஹல கோரளை, பாததும்பர, தொலுவ, யடினுவர மற்றும் மெததும்பர

கேகாலை மாவட்டத்தின் கேகாலை, அரநாயக்க, தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை மற்றும் மாவனல்லை.

மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்கை கோரளை, உக்குவலை, ரத்தோட்டை, வில்கமுவ மற்றும் லக்கல – பல்லேகம.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, அம்பகமுவ மற்றும் நில்தண்டாஹீன்ன.

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி.

மொனராகலை மாவட்டத்தின் பதல் கும்பர.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை.

காலி மாவட்டத்தின் நியாகம.

அதேபோல் பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் 23 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு