மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள மலைப்பகுதிகளில் புவியியல் ஆராய்ச்சிகளை நடத்துவது முக்கியமான பணி

மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நமது நாட்டிற்கு கடன் மீளச்செலுத்தும் சலுகைக்காலம் தேவைப்படுவதால், IMF ஒப்பந்தத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சூறாவளிக்கு முன்பு இருந்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே, 2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமான விடயமாக அமைந்து காணப்படுகின்றன. 2033 இல் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே IMF கூறியிருந்தது. ஆனால் அப்போதைய அரசாங்கம் 2028 தொடக்கம் கடனை அடைப்போம் என தானாகவே இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் இப்போதாவது இந்த ஒப்பந்தத்தை திருத்தியமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அரநாயக்க ரிவி சந்த வித்தியாலயத்திற்கு நீர் இறைக்கும் இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை (21) அன்று நன்கொடையாக வழங்கி வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பாடசாலை வளாகத்தில் இடைத்தங்கல் முகாமில் இருக்கும் மக்களின் சுக துக்கங்களை கேட்டறியச் சென்ற வேளை, ​​அங்குள்ள மக்கள் தங்கள் குடிநீருக்காக தண்ணீரைப் பெறுவதில் சிரமப்படுவதை அறிந்த பிற்பாடே இந்த நீர் இறைக்கும் இயந்திரம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள மலைப்பகுதிகளில் புவியியல் ஆராய்ச்சிகளை நடத்துவது முக்கியமான பணியாகும். இந்த ஆராய்ச்சியை விரைவுபடுத்தி, அது குடியேற்றத்திற்கு ஏற்ற பகுதியா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். முடிவை உறுதிப்படுத்துவதோடு, காணி, வீடு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக நேரடித் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

மக்களின் சுக துக்கங்களை கேட்டறிய இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்ற சமங்களில், ​​இங்கிருக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. மக்களைத் தூண்டுவதற்காக இத்தகைய விஜயங்களை நான் மேற்கொள்ளவில்லை. மாறாக அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காகவே இதைச் செய்து வருகிறேன். ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சுத் திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் இதுபோன்ற உதவிகளைச் செய்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வர்க்கம், நிறம், கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும். இந்தப் பேரழிவில் வர்க்கம், நிறம் அல்லது கட்சி வேறுபாடுகள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு அவர்களை மீட்டெடுக்க நாம் கை கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக மக்களுக்கு நான் செய்து வரும் சேவைகளைப் பார்த்து, கேலி செய்தாலும், அது பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்வேன். உண்மையைப் பேசும்போது, ​​ கேலி செய்கின்றனர். யார் என்ன கேலி செய்தாலும், நாட்டு மக்களுக்கு உதவுமாறு சகலரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

jud_1

குற்றவாளி தப்பிச் செல்ல போலிக் கடவுச்சீட்டு கொடுத்து உதவிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

March 6, 2026

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கெசல்வத்த தினூஷ’ வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகப் போலி கடவுச்சீட்டைத்

ba

மட்டக்களப்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் பிரஜா சக்தி திட்டத்தில் மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர்களை உள்வாங்கப்படவில்லை

bah

ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை அழித்துள்ளோம் – பஹ்ரைன்

March 6, 2026

மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் ஏழாவது நாளாக நீடிக்கும் நிலையில், ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை தாம்

man

சாந்திபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய நான்கு பெண்கள் கைது!

March 6, 2026

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஆம் திகதி 04 இரவு

joh

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

March 6, 2026

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம்

sl

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியனை கடந்தது!

March 6, 2026

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக

cru

தீவிரமடைந்து வரும் மோதல்; கச்சா எண்ணெய் விலை குறித்து கட்டாரின் எச்சரிக்கை!

March 6, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

pil

அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில் பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரிய சட்டத்தரணிகள்!

March 6, 2026

உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத்

fiwh

உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை

March 6, 2026

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த

car

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

March 6, 2026

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் 2026-27

st

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்; ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள் வெளியீடு!

March 6, 2026

முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க”

download

படகு விபத்துக்கான முழு விசாரணைக்கு பணிப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரார்ந்த படகு விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து