மண்சரிவுகளில் புதையுண்ட லயன் குடியிருப்பாளர்களும் மலையகத் தியாகிகளே – திலகர்

டிட்வா சூறாவளியுடனான மண்சரிவுகளில் புதையுண்ட 127 மலையக லயன் குடியிருப்பாளர்களும் கூட மலையகத் தியாகிகளாக நினைவு கூரப்படவேண்டியவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

மலையகத் தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வுகள் நுவரெலியா நகர மத்தியில் அமைந்த மலையத் தியாகிகள் நினைவு தூபி முன்றலில் மலையகத் தியாகிகள் தினமான ஜனவரி 10 ஆம் திகதி காலை நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் பிரதேச அரசியல், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியதுடன் தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

தலைமை உரையாற்றிய இராஜாராம்

மலையக தியாகிகள் நினைவாக நுவரெலியா நகரில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபி எமது முயற்சியால் இந்த இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த நாட்டுக்காக உழைத்த மக்களுக்கு நன்றிக் கடனாக இலங்கை அரசே இத்தகைய நினைவுத்தூபியை அமைத்திருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் தொடர்ந்தும் அரசால், அரசாங்கங்களால் பாராமுகமாக நடாத்தப்படும் மக்களாகவே இருநூறு வருடங்களாக வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய தியாகிகளின் நினைவேந்தல் நாட்டுக்கும் உலகுக்கும் மலையக மக்கள் என்போர் யார்? அவர்களின் உழைப்பின் பெறுமதி என்ன எத்தகைய பங்களிப்புகளை நாட்டுக்காக செய்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது என தெரிவித்தார் .

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா, மலையகத்தில் டிட்வா புயலனர்த்த மண்சரிவுகளால் உயிரிழந்தவர்களும் தியாகிகளே என்றார்.

பத்துச்சத சம்பள உயர்வுக்காக போராடி உயிர்நீத்த தோட்டத் தொழிலாளியும் முதல் தியாகியுமான முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த ஜனவரி 10 ஆம் திகதியன்று இதுவரை மலையகப் போராட்டத் தியாகிகள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செய்கின்றோம். சம்பள உயர்வுக்காக மட்டுமன்றி தொழிற்சங்க உரிமை, காணி உரிமை போராட்டங்களில் உயிர்நீத்தவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குகின்றனர்.

அண்மையில் இடம்பெற்ற டிட்வா சூறாவளியுடனான மண்ணில் புதையுண்ட 127 மலையக லயன் குடியிருப்பாளர்களும் கூட மலையகத் தியாகிகளாக நினைவு கூரப்படவேண்டியவர்கள்தான். ஏனெனில் இவர்களது மரணம் இயற்கையானது அல்ல. இவர்களது வாழ்விடங்களை இவர்கள் தெரிவு செய்யவில்லை. அவர்களின் உழைப்பை உறிஞ்சுவதற்காக அவர்களது உயிர்களின் மதிப்பைக் கருதாது பாதுகாப்பற்ற வாழ்விடங்களில் வாழவைக்கப்பட்டதே இவர்களின் மரணத்துக்குக் காரணமாகும்.இந்த அனர்த்ததினால் இலங்கையில் நடந்த மரணங்களில் 25% வை மலையகத் தோட்டப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன என்பது கவனத்துக்குரியது. இவர்களின் இந்த மரணமும் அதனைத் தொடர்ந்த மக்கள் எழுச்சியும் என்றுமில்லாத வகையில் மலையகத்தில் நிலத்துக்கும் நியாவாகத்துக்குமான உரிமைக் கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இந்த 127 உயிர்களின் தியாகம் இந்த எழுச்சிக்கு காரணமாகியுள்ளது என்ற அடிப்படையில் இவர்களையும் கூட மலையக தியாகிகளாக நினைவுகூர வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய