மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாக இருந்தால் அரசாங்கம் மாகாண சபைத்தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்றையதினம்(17) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தின் பின்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் உதவிபுரிந்தாலும் முழுநாட்டையும் கட்டியெழுப்ப முடியாது விவசாயம் மற்றும் பெருந்தெருக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு பலகோடி ரூபா தேவை அரசாங்கம் அன்பளிப்பு செய்வோர் மாநாட்டை நடாத்தவுள்ளதாக அறிகின்றோம்.

எது எவ்வாறாக இருந்தாலும் வரவு செலவுத்திட்டத்தில் மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

தேர்தலை விரைவாக நடாத்தி மக்கள் பிரதிநிகளிடம் அதிகாரங்களை கையளித்தால் மாகாண சபைகள் மூலம் புனருத்தான வேலைகளை மேற்கொள்ள முடியும் புலம்பெயர்ந்தோர் மூலமும் உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடாத்தி அதிகாரங்களை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளித்தால் மாத்திரமே வெள்ள அனர்த்த பாதிப்பிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் இந்தியா சென்றமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் பல்வேறு தரப்பினருடன் பேசுவதற்காக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க, மைத்திரி காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பை கொண்டு வந்தால் தமிழ் மக்களுக்கு பாதிப்பு உள்ளதாகவும் சமஸ்டி தீர்வை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும் நோக்குடன் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கான புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை இந்த விடயங்களை எடுத்துக்கூற சென்றுள்ளதாக அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்