‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக பேசாமல் மௌனமாக நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹயாத்ரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கரண் பி. ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் – கியூரிஸ் – பிங்க் மூன்- மூவிமிலி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் முப்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.