பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் ஒருவர் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
நேற்று புதன்கிழமை (10) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காணாமல் போனவர் பேராதனை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் தனது தாயுடன் வீட்டிற்குச் செல்லும் போது இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேராதனை பொலிஸார், அப்பகுதி மக்களுடன் இணைந்து, காணாமல் போன நபரைக் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.