மகாகவி பாரதியாரின் முற்போக்குச் சிந்தனைகள் இன்னும் செயல்வடிவம் பெறவில்லை – ஆளுநர்

மகாகவி பாரதியார் நூற்றாண்டுக்கு முன்பே விதைத்துச் சென்ற முற்போக்குச் சிந்தனைகள், இன்றும் எமது சமூகத்தில் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை என்பதே நிதர்சனம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (11.12.2025) மாலை நடைபெற்றது.

இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சிறீ சாய்முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், டித்வா பேரிடரால் எமது மாகாணம் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான சூழலில், இந்நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் தருணத்தில், வடக்கு மாகாண மக்கள் சார்பாக இந்திய அரசாங்கத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எமது மக்கள் அனர்த்தத்தைச் சந்தித்தபோது, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் எனப் பல்வேறு விடயங்களில் முதலாவது நாடாக இந்தியா எமக்குக் கரம் கொடுத்திருக்கின்றது. அந்த உதவியை நாம் என்றும் நினைவில் கொள்வோம்.

பாரதியார் இந்தியாவில் பிறந்திருந்தாலும், தமிழுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய சேவையானது அவரை ஒரு பிராந்தியக் கவிஞராக அல்லாமல், உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் ஒரு ஆளுமையாக மாற்றியிருக்கிறது. எமது சிறுபராயத்தில் பேச்சுப் போட்டிகள் என்றால், பாரதியார் இல்லாத தலைப்புகளே இருக்காது என்னும் அளவுக்கு அவர் எம்முடன் ஒன்றிப்போயுள்ளார்.

நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் பாரதி. அவர் ஒரு சிறந்த கவிஞராக மட்டுமல்லாமல், இந்திய தேச விடுதலிக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு போராளியாகவும் திகழ்ந்தார். தனது கனல்தெறிக்கும் பாடல்கள் மூலம் மக்களிடத்தில் தேசபக்தியையும், விடுதலை உணர்வையும் ஊட்டினார்.

பல மொழிகளைக் கற்றறிந்த பன்மொழிப் புலவராகத் திகழ்ந்த அவர், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ எனத் தமிழுக்கு மகுடம் சூட்டினார். இவ்வுலகில் அவர் வாழ்ந்தது குறுகிய காலமே என்றாலும், அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. அதனால்தான் நூற்றாண்டு கடந்தும் அவர் இன்றும் நம்மால் போற்றப்படுகின்றார், என்றார்.

இந்நிகழ்வில் யாழ். தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?

December 14, 2025

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு,

ஹமாஸின் முக்கிய தளபதி படுகொலை

December 14, 2025

காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின் போது ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

December 14, 2025

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

கட்சியில் என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் காங் தலைவர்கள்!

December 14, 2025

‘என்ன நடக்கிறது கட்சியில்…’ என, காங்., மூத்த தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். பீஹார் சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், காங்கிரசின் நிலை

நிர்வாக தாமதங்களால் 88 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்கவில்லை?

December 14, 2025

மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும், 100 நாள் வேலை திட்டத்தில், மாநில அளவில் ஏற்படும் நிர்வாக

நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியம் – சஜித் பிரேமதாச

December 14, 2025

நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டித்வா புயலால்

உள்ளாட்சி தேர்தல்; கேரள அரசியலில் திருப்புமுனை – மோடி

December 14, 2025

கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 திகதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்

இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

December 14, 2025

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

மெஸ்ஸியால் ரசிகர்கள் வன்முறை

December 14, 2025

ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு