திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு தேவையில்லாத போதிலும் பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எதிர்க்கட்சியானாலும் அதை நிறைவேற்றி வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதோடு ஏனைய சமயத்தவர்களுக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றில் பிரச்சினை ஏற்படுமானால் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படலாம்.
அதனால் நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். ஒருமைப்பாடே தேசிய பாதுகாப்பாகும். அப்படி பார்த்தால் இன்று நடப்பது பேரழிவாகும். பொலிஸார் உயர் இடத்தில் கிடைக்கும் பணிப்புரைக்கமைய பௌத்த சிலையை அகற்றி பின்னர் வைக்கின்றனர்.
வேலை செய்ய தெரியாது. அத்தோடு வேலை செய்து பழக்கமில்லை. இவ்வாறான பிரச்சினைகளை மென்மையாக தீர்த்து கொண்டிருக்க வேண்டியதாகும். வார்த்தைகளில் பாரிய செயற்பாடுகள் தொடர்பில் பேசுவோர் செயற்பாடுகளில் இல்லை.
நாம் தேர்தலுக்கு அல்லது புள்ளடிகளுக்கு மதத்தை பயன்படுத்தாக உண்மையான பௌத்தர்கள் என குறிப்பிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டார்.
ஊழல், பணமதிப்பிழப்பு, சதி திட்டம் உள்ளிட்ட குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி பொல்சொனாரோவைக் கைது செய்தோம். 2022 தோ்தலில் தோல்வியடைந்த பிறகு அவா் அமைதியான ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரும் 25-ஆம் திகதி தொடங்கும். சிறை செல்வதைத் தவிர்ப்பதற்காக அவா் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அவரை முன்கூட்டியே கைது செய்தோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2022 ஒக்டோபா் மாதம் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய அதிபா் லூலா டாசில்வா வெற்றிபெற்ற பிறகு, பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் 2023 ஜனவரி 8-ஆம் திகதி பிரதமா் அலுவலகம், பாராளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அதிகாரபீடங்களைத் தாக்கினா். இந்த விவகாரம் தொடா்பாகவே பொல்சொனாரோ மீது வழக்கு தொடரப்பட்டு, அவா் தற்போது சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளார்.
இருந்தாலும், இது அரசியல் பழிவாங்கும் செயல் என்று பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.