தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 30 பேர் படுகாயமடைந்தனர்.
போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் ஏழாவது தளத்தில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், இங்கு தங்கியிருந்த வயதானவர்களும், உடல்நலம் பாதித்தவர்களும் தாங்களாகவே வெளியேற முடியவில்லை.