போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்களின் ஆற்றாமையையே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன – சமிந்த விஜேசிறி கருத்து

ஊடகங்களில் பொய்யை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று ஊடகங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்களின் ஆற்றாமையையே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கத்தின் மோசடிகளை சுட்டிக்காட்டும் போது ஆளுங்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் மீது முன்வைக்கிறார்கள். அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று வியாழக்கிழமை (20) சபையில் ‘பத்தர விஸ்தர’ நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.

ஊடகங்களில் பொய்யுரைத்து தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதி பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் எந்த வாக்குறுதிகளும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்களின் ஆற்றாமையையே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆகவே ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாகவும், வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.இந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளை நாங்கள் நினைவூட்டும் போது அரசாங்கம் எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது.

மின்கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுத்திய திட்டங்களே தற்போது செயற்படுத்தப்படுகிறது. ஆகவே போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றினோம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த