போர்வீரர்கள் எதிர்கொள்ளும் நிலப் பிரச்சினைகள்…

போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் எதிர்நோக்கும் நிலம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சில் செவ்வாய்கிழமை (24) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் போர்வீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணியகத்தினால் அடையாளம் காணப்பட்ட நிலப் பிரச்சினைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

போர்வீரர்கள் நாட்டின் இறையாண்மையையும் நிலையான அமைதியையும் பாதுகாக்கச் செய்த அர்ப்பணிப்பை மதித்து, அரசாங்கம் நில சீர்திருத்த ஆணைக்குழு மூலமாக நிலங்களை வழங்கும் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பில் அமல்படுத்தியுள்ளது.

அதற்கமைய ஹோமாகம பிரதேச செயலாளர் பிரிவின் மீகொடவத்த மற்றும் பலெந்தகொட, மத்துகம பிரதேச செயலாளர் பிரிவின் யடடோலவத்த, மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவின் மதுருகெட்டியவத்த ஆகிய பகுதிகளில் நிலப்பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலங்களுடன் தொடர்புடைய நிலுவையில் உள்ள பிரச்சினைகள் இக்கூட்டத்தில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டன.

போர்வீரர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் உரிமையை உறுதிப்படுத்த தேவையான சட்டப்பூர்வ ஆவணங்கள் வழங்குவதை விரைவுபடுத்துதல், மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற விவசாயம் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இங்கு கருத்து வெளியிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், அரசாங்க தலையீட்டின் மூலம் வழங்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு சேவைகள்), நிலா சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிராந்திய பணிப்பாளர்கள், மேலும் இராணுவ போர்வீரர் சேவைகள் மற்றும் மறுவாழ்வு பிரிவின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய