போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக, தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்படைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் தங்கள் காணிகளை இழந்துள்ள மக்களும், வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதோடு போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில், தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய காணிகளை, அவர்களின் அனுமதியின்றி, உப்பளம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு, ‘மகாவலி அதிகார சபையினால் தனியார் காணிகளை உப்பளம் அமைப்பதற்காக வழங்கியமை தொடர்பான முறைப்பாடு’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

உப்பளம் அமைக்கப்பட்டு வரும் நிலத்தின் உரிமையை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும், எனவே, நிலத்தின் உரிமை திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படும் வரை, இந்த நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்குமென, அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் பகுதியில் உப்பளத்தை அமைப்பதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அனுமதியின்றி 50 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமையாளர்கள் அளித்த முறைப்பாட்டுடன் தொடர்பபுடைய , ஆவணங்களையும், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளார்.

உப்பளத்திற்காக ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்திற்குள் தனியார் காணிகளும் மேய்ச்சல் தரையும் உள்ளடங்குவதாக நில அளவைத் திணைக்களத்தின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவிடம், சர்ச்சைக்குரிய வகையில் காணிகள் கைமாற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அந்தக் காணிகள் தனியார் காணிகள் என்பது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி, அதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுத் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தமது காணிகளை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, உப்பளம் அமைக்கப்படும் இடத்தைப் பார்வையிடச் சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் காணியை இழந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

kid

கொத்தியாபுலையில் கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு;மற்றுமொருவர் சடலமும் கிணற்றுக்குள்…

March 20, 2026

ட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில்

Nalinda Jayatissa

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

March 20, 2026

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும்

Bimal PArl

பாராளுமன்றில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு குறித்து அமைச்சர் கருத்து

March 20, 2026

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல்

no

ஹொலிவுட் நடிகர் சக் நோரிஸ் காலமானார்

March 20, 2026

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஹொலிவுட் திரைப்பட நடிகர் சக் நோரிஸ் (Chuck Norris) காலமானார். அவர் காலமான

bima

இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி சட்டம் ஒத்திவைப்பு

March 20, 2026

அதிவேக வீதிகளில் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி (Seat Belt) அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான

gaze

இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி சட்டம் ஒத்திவைப்பு

March 20, 2026

அதிவேக வீதிகளில் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி (Seat Belt) அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான

anu

தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – ஜனாதிபதி

March 20, 2026

சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

mid

இலங்கையர்களின் நிலைமை குறித்து கண்டறியும் நோக்கில் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

March 20, 2026

மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் போர் பதற்றம் நிலவி வரும் பின்னணியில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து

Vanni

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!

March 20, 2026

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக, தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தி

south

கார் உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தென் கொரிய தொழிற்சாலையில் தீ விபத்து

March 20, 2026

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர்

mexi

போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை!

March 20, 2026

மெக்சிக்கோவில் சினலோவா கார்ட்டல் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிக்கன் இராணுவம்

Quebec father

இரண்டு பிள்ளைகள் கொலை வழக்கில் தந்தையே குற்றவாளி: கனடாவின் கியூபெக்கில் சம்பவம்!

March 20, 2026

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Laval நகரில் இந்தியர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த வழக்கில், அவர் குற்றவாளி