போராட்டத்தின் முதன்மை கோரிக்கைகளை நாம் நிறைவேற்றியுள்ளோம் – ரணில்

இலங்கை ஆசியாவின் மிகப் பழைமையான ஜனநாயகம் மிக்க நாடாகும். லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை எதிர்கொள்ளும் பிற நாடுகளைப் போலல்லாமல், இந்த ஜனநாயகப் பாதையைப் பேணுவது நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாததாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு பொது நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார எழுதிய ‘போராட்டத்தின் போலி வலிமை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நெருக்கடி காலத்தின்போது பாராளுமன்றத்தை பாதுகாத்ததற்காக முன்னாள் சபாநாயகருக்கு நன்றி கூறுகின்றேன். நிதியதிகாரம் பாராளுமன்றத்திடமே இருப்பதால், பாராளுமன்றம் இல்லாமல் பொருளாதார மீட்சியை சாத்தியப்படுத்தியிருக்க முடியாது. உணவு, எரிபொருள் மற்றும் உரம் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த அக்காலப்பகுதியில் அரசியல் கட்சி அமைப்பும் சிதைவடைந்திருந்தது.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறிய போது ஏற்பட்ட அதிகார வெற்றிடத்தின் போது, எதிர்க்கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியன அரசாங்கத்தை அமைக்க மறுத்த நிலையில், ஆரம்பத்தில் தனியொருவராக எந்தவொரு கட்சியின் ஆதரவும் இன்றி நான் சவாலை ஏற்றுக்கொண்டேன். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வரிகளை அதிகரிப்பது போன்ற வேதனையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. இது மக்களை பாதித்தாலும், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும் வருவாயை உறுதி செய்வதற்கும் அவசியமாக இருந்தது.

இலங்கையின் நிலைமையை பங்களாதேஷில் அண்மையில் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மற்ற நாடுகளில் அரசாங்கங்கள் கவிழ்ந்து வன்முறைகள் (துப்பாக்கிச் சூடு) அதிகரித்த நிலையில், இலங்கை இராணுவ ஒடுக்குமுறையோ அல்லது பாரிய உயிரிழப்புகளோ இன்றி, ஜனநாயக வழிகளிலும் அரசியலமைப்பின் மூலமும் நெருக்கடிகளைக் கையாண்டது.

எனது தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது. பின்னர் பிரதமர் அலுவலகம் தாக்கப்பட்ட போதும் கூட, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை பாதுகாப்புப் படையினர் தவிர்த்தனர். எக்காரணத்துக்காகவும் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு நான் அறிவுறுத்தியிருந்தேன். பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் ஜனநாயகத்தின் மையத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தனர். பாராளுமன்றத்தை பாதுகாப்பதே அரசை பாதுகாப்பதற்கு மிக முக்கியமானதாகும்.

எரிபொருள், உணவு மற்றும் உரம் வழங்குதல், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற போராட்டத்தின் முதன்மையான கோரிக்கைகளை எமது அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை ஆசியாவின் மிகப் பழைமையான ஜனநாயகம் மிக்க நாடாகும். லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை எதிர்கொள்ளும் பிற நாடுகளைப் போலல்லாமல், இந்த ஜனநாயகப் பாதையைப் பேணுவது நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது.

நாங்கள் பாராளுமன்றத்தை பாதுகாத்தோம். அந்த முறைமையை பாதுகாத்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை எம்மால் பாதுகாக்க முடிந்தது. பங்களாதேஷில் என்ன நடந்தது? ஆனால் எமது நாட்டில் பிரஜைகள் உயிரிழக்கவில்லை. யாருக்கும் அடிபணியாமல் பிரச்சினைகளை எம்மார் தீர்க்க முடிந்தது என்றார்.

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.