போராட்டங்கள் இன்றி சம்பள உயர்வு – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, வீதிப் போராட்டங்களோ அல்லது தொழிற்சங்க வேலைநிறுத்தங்களோ இன்றி, தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆகக்கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

வெலிமடை பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு நேரில் சென்று, தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல்களை நேரில் ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் வெறும் 10 ரூபாய் சம்பள உயர்வுக்காகவும் தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பதை நிறுத்தி வீதியில் இறங்கிப் போராட வேண்டியிருந்தது என நினைவுகூர்ந்தார்.

ஆனால் தற்போது தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிக்கமைய, எந்தவிதப் போராட்டங்களும் இன்றி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சம்பள முறையின் கீழ், ஒரு தொழிலாளிக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் தற்போது 1,750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் கம்பனிகளின் பங்களிப்புடன் அரசாங்கத்தின் 200 ரூபாய் கொடுப்பனவும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதன்படி 25 நாட்கள் பணிபுரியும் ஒரு தொழிலாளிக்கு கடந்த மாதத்தை விட இந்த மாதம் மேலதிகமாக 10,000 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதுடன், 31 நாட்களும் பணிபுரிந்த சில தொழிலாளர்களுக்கு 12,400 ரூபாய் வரை மேலதிக கொடுப்பனவு கிடைத்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் ஒரு தொழிலாளி ஆண்டுக்குச் சுமார் 1,44,000 ரூபாய் வரையான மேலதிக வருமானத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பைச் சாத்தியப்படுத்துவதற்காகத் தோட்ட நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் சுமார் 39 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி செயலகத்தில் நடாத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களின் 200 ஆண்டுகால வரலாற்றில், அவர்களது உரிமைகளையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையைத் துணிச்சலுடன் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேலும் தெரிவித்தார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய